டால்பி திறன் கொண்ட ஜெப்ரானிக்ஸின் புதிய சவுண்ட்பார்
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய சவுண்ட்பார் வடிவ ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. ZEB-Juke Bar 9000 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் டால்பி ஒலியை வழங்கும் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுகிய இடத்தில் அடங்கும் வகையில், சுவரில் எளிதாக மாட்டக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்பீக்கர் 120 RMS அவுட்புட் ஒலித் திறன் கொண்டது. திரையரங்கம் போன்ற ஒலி அனுபவத்தை இந்த ஸ்பீக்கர் தரும் என ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த சவுண்ட்பாரில் HDMI(ARC) மற்றும் ஆப்டிகல் உள்ளீட்டு வசதி உள்ளது. மேலும் ப்ளூடூத், USB/AUX/ HDMI போன்ற வசதியும் உள்ளது. சத்தம் மற்றும் மீடியா கட்டுப்பாட்டு இயக்கிகளைக் கொண்ட LED திரையும் ரிமோட் வசதியும் இதன் ஸ்பீக்கர்களில் உள்ளது.
இதைத் தவிர, கூடுதலாக வயர்லெஸ் சப்-வூஃபர்களுடன் கூடிய 80W RMS அவுட்புட் திறன் கொண்ட Zeb-Juke Bar 4000, 120W RMS அவுட்புட் திறன் கொண்ட Zeb-Juke Bar 5000 Pro மற்றும் 160W RMS அவுட்புட் திறன் கொண்ட Zeb-Juke Bar 6000 DWS PRO உள்ளிட்ட மாடல்களையும் ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
ZEB-Juke Bar 9000 Proன் விலை ரூ.29,999. சப் வூஃபருடன் கூடிய இந்த சவுண்ட்பார் மாடலின் ஆரம்பவிலை ரூ.14,999.