அறிவியல்
மலைக்க வைக்கும் இன்ஸ்டாகிராம் வருமானம்
புகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கள் என்பவற்றினை பகிரும் வசதியை தரும் தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது. இதனை கடந்த 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் 715 மில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருந்தது. தற்போது பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இன்ஸ்டாகிராமின் கடந்த வருட வருமானம் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டில் சுமார் 20 பில்லியன் டாலர்களை பேஸ்புக் வருமானமாக ஈட்டியுள்ளது. இது பேஸ்புக் நிறுவனம் கால் ஆண்டில் ஈட்டும் வருமானத்திற்கு சமனானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் ஆப் என்பவற்றினை இணைத்து சேவையை வழங்குவதற்காக பேஸ்புக் நிறுவனம் முயற்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.