அறிவியல்

108MP கேமரா

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான Flagship ஸ்மார்ட் போன்களான சியோமி Mi 10 மற்றும் சியோமி Mi 10 Pro இன்று சீனாவில்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் பல நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் புது போன்களை அறிமுகப்படுத்துவதை தள்ளி வைத்துள்ளன. எனினும் சியோமி நிறுவனம் தனது இரு Flagship போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக இந்த அறிமுக நிகழ்ச்சி, விழாவாக நடைபெறாமல் ஆன்லைனில் மட்டுமே ஒளிபரப்பப்பட்டது. விரைவில் இந்தியாவில் இந்த போன்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி நிறுவனத்தால் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Mi 10 மற்றும் Mi 10 Pro ஸ்மார்ட் போன்களின் விவரக்குறிப்புகள் (Specifications), விலை மற்றும் பிற விவரங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். Mi 10 மற்றும் Mi 10 Pro இரண்டுமே சமீபத்திய ஆக்டா கோர் குவால்காம் Snapdragon 865 SoC processor-ஆல் இயங்கும். MIUI 11 operating system-ல் இயங்குபவை இவை. மேலும் இரண்டுமே 5-ஜி நெட்வொர்க்குகளுக்கு இணக்கமானவை என்று தெரிவித்துள்ளது சியோமி.

Mi 10:

சியோமி Mi 10 ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 10-ஐ பெற்றுள்ளது. இரட்டை நானோ சிம் ஸ்லாட் கொண்டுள்ளது. இது 6.67-இன்ச் Full HD (1080 x 2340 pixels), வளைந்த ஏ.எம்.ஓ.எல்.இ.டி (AMOLED) டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 12 ஜிபி எல்பிடிடிஆர் 5 (LPDDR5) ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 (UFS 3.0) சேமிப்பை கொண்டிருக்கிறது. 8 ஜிபி முதல் 12 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி வேரியண்ட்டுகளுடன் வருகிறது. சியோமி Mi 10-ல் 4,780 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 30 வாட் wired சார்ஜிங், 30 வாட் wireless சார்ஜிங் மற்றும் 10 வாட் reverse wireless சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த மொபைலுக்கு பின்னால் இரு 2MP சென்சார்கள், 108MP முதன்மை சென்சார் மற்றும் 13MP wide angle module ( வொயிட் ஆங்கிள் மாட்யுல்) கொடுக்கப்பட்டுள்ளன. 8 கே வீடியோவை இது ஆதரிக்கும் என கூறப்பட்டுள்ளது. முன் பக்கம் 20 எம்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

Mi 10 Pro :

Mi 10 மற்றும் Mi 10 Pro இரண்டுமே பார்ப்பதற்கு ஒரே மாதிரியான வடிவமைப்பை தான் பெற்றுள்ளன. Mi 10 போலவே Mi 10 Pro மொபைல் போன்கள் இரட்டை நானோ சிம், 6.67-இன்ச் Full HD (1080 x 2340 pixels), வளைந்த ஏ.எம்.ஓ.எல்.இடி (AMOLED) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. 12 ஜிபி எல்பிடிடிஆர் (LPDDR5) 5 ரேம் மற்றும் 512 ஜிபி யுஎஃப்எஸ் 3.0 (UFS 3.0) சேமிப்பை கொண்டிருக்கிறது. 8 ஜிபி முதல் 12 ஜிபி ரேம், 128 ஜிபி அல்லது 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வேரியண்ட்டுகளுடன் வருகிறது. சியோமி Mi 10-Pro வில் 4,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 50 வாட் wired சார்ஜிங், 30 வாட் wireless சார்ஜிங் மற்றும் 10 வாட் reverse wireless சார்ஜிங்கை ஆதரிக்கிறது. Mi 10 உடன் ஒப்பிடும்போது Mi 10 Pro மிகவும் சக்திவாய்ந்த குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மொபைலுக்கு பின்னால் இரு 2MP சென்சார்கள், 108MP முதன்மை சென்சார் மற்றும் 20MP wide angle module ( வொயிட் ஆங்கிள் மாட்யுல் ) கொடுக்கப்பட்டுள்ளன. இதுவும் 8 கே வீடியோவை இது ஆதரிக்கும் என கூறப்பட்டுள்ளது. முன்பக்கம் 20 எம்பி செலஃபீ கேமராவை பெற்றுள்ளது.

விலை விவரங்கள்:

Mi 10 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல் இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,800, 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை தோராயமாக ரூ.48,000-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Mi 10 Pro போனின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.50,000, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.56,000, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.60,000 என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button