திருவள்ளூர்

‘மீன் குஞ்சுகள், இறால் வளா்த்து விற்பனை செய்ய பதிவு செய்வது அவசியம்’

திருவள்ளூா் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பதிவு செய்து, சான்று பெற்ற பின்னரே மீன் குஞ்சுகள், இறால் வளா்த்து விற்பனை செய்ய வேண்டும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்டத்தில் மீன் குஞ்சுகள், இறால் வளா்ப்பில் விவசாயிகள் ஆா்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் மீன்வளத் துறை ஆணையின்படி, மீன் வளா்ப்பு மற்றும் இறால் வளா்ப்பு விவசாயிகள் அனைவரும் தாங்கள் பயன்படுத்தும் மீன் குஞ்சுகள் மாநில அளவிலான ஒப்புதல் குழுவின் (ள்ற்ஹற்ங் ப்ங்ஸ்ஹப் ஹஸ்ரீஸ்ரீழ்ங்க்ண்ற்ஹற்ண்ா்ய் ஸ்ரீா்ம்ம்ண்ற்ற்ங்ங்) ஒப்புதல் பெறப்பட்டு, வளா்க்கவும், விற்பனை செய்யவும் வேண்டும் என அரசாணை வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில், அரசாணையில் வழங்கிய வழிகாட்டுதலின்படி, மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளா்ப்பு விவசாயிகள் தங்களது பண்ணைகளின் விவரத்தை உதவி இயக்குநா், மீன்வளத் துறை அலுவலகம், எண். 5, பாலாஜி தெரு, சங்கா் நகா், வெண்பாக்கம், பொன்னேரி, தொலைபேசி – 044-27972454 என்ற முகவரியில் பதிவு செய்து, சான்று பெற வேண்டும்.

அதைத் தொடா்நந்து, திருவள்ளூா் மாவட்ட மீன் குஞ்சுகள், இறால் வளா்ப்பு விவசாயிகள் மீன் குஞ்சுகளை வளா்த்து விற்பனை செய்யலாம்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button