கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

ரேமா புவுண்டேசன் மற்றும் தமிழ்நாடு இளம் வழக்கறிஞர்கள் சங்க செயலர் திரு காசி புதியராஜாஅவர்களுடன் இனைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி.
30/03/2020 திங்கள். இன்று காலை செங்கல்பட்டை அடுத்துள்ள உள்ள பழவேலி கிராமத்தில் வசிக்கும் இருளர்பழங்குடி மக்களுக்கு கொரானா தொற்று எதனால் வருகிறது என்றும், எப்படி பரவுகிறது என்றும் சொல்லிக்கொடுக்கபட்டது. மேலும் தமது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தைப்பற்றியும் ஒருவொருக்கொருவர் இடைவெளி விட்டு நிற்பதன் ( இருப்பதின் ) அவசியம் குறித்தும் விழிப்புனர்வு ஏற்படுத்தி செயல்முறை பயிற்ச்சியும் அளிக்கப்பட்டது. சிறியவர், பெரயவர் அனைவரும் தமது கைகளை கழுவி சுத்தப்படுத்திக் கொண்டனர்
நிகழ்ச்சியின் நிறைவாக அனைத்து குடும்பத்துக்கும் அரிசி மற்றும் எவர்சில்வர் பவுல், சோப்பு வழங்கப்பட்டது. இதில் ரேமா பவுண்டேசனின் தலைவர் திரு ஆரோன் மற்றும் சாம், வினோத் மற்றும் பலர் கலந்துகொண்டன









