பிரத்யேக கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு

திருவேற்காடு நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளின் உள்ளே தூய்மைப்படுத்த புதிய முயற்சியாக பிரத்யேக கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
திருவேற்காடு நகராட்சியில் கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.அந்தவகையில் திருவேற்காட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று அண்மையில் ஊர் திரும்பிய நபர்கள் மற்றும் வெளி மாநிலம் சென்று திரும்பிய நபர்கள் என மொத்தம் 66 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது வீட்டிற்குள் சென்று தூய்மைப் பணி செய்வதும் கிருமி நாசினி தெளிப்பதும் தூய்மை பணியாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.பாதுகாப்பின்றி
வீட்டிற்குள் சென்று கிருமி நாசினி தெளிக்கும் போது நோய் தொற்று ஏற்படும் என்பதால் அங்கு பணியாற்ற யாரும் முன் வரவில்லை. இந்த நிலையில்
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் கிருமி நாசினி தெளிக்க திருவேற்காடு நகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆல்பர்ட் அருள் ராஜ் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். இதற்காக கைதேர்ந்த பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் குழுக்களை உருவாக்கியுள்ளார். அவர்களுக்கு வைரஸ் தாக்காத முழு உடல் கவசத்தை வழங்கி ஐ.டி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் கொசு விரட்டும் பிரத்யேக கருவி மூலம்
கிருமி நாசினி தெளித்து வருகிறார்.இந்த பிரத்யேக கருவியின் மூலம் கிருமி நாசினி தெளிப்பதால் காற்றில் நீர் துகள்கள் சுமார் 6 மணி நேரம் வரை இருந்து வைரஸ் பரவாமல் இருக்கும் .சுகாதாரத்துறை ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.






