கரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் பிளே ஸ்டோரில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கரோனா வைரஸினால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பல்வேறு வணிக, தொழில்நுட்ப நிறுவனங்களின் வணிகங்கள் கரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் பிளே ஸ்டோரில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதாவது, அரசாங்க நிறுவனங்கள், சுகாதாரத்தை மையமாகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்கள் வெளியிடும் கரோனா தொடர்பான தகவல்கள் மட்டுமே காண்பிக்கப்படும். கரோனா வைரஸுக்கு தொடர்பான ஆன்லைன் கேம் ஆப், காரோனா குறித்த பொழுதுபோக்கு செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் பயனர்கள், ஆப் ஸ்டோர் மூலம் தங்கள் சாதனங்களில் நம்பகமான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்வதை கருத்தில் கொண்டு ஆப்பிள் இந்த புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தைப் போன்று கூகுளிலும் கரோனா வைரஸ் தொடர்பான பயன்பாடுகள் மற்றும் கேம்களை கட்டுப்படுத்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.