தருமபுரி

தாராபுரம் அருகே தனியார் பஸ் கார் மோதல் 4 பேர் படுகாயம்.

தாராபுரம் அருகே தனியார் பஸ் கார் மோதல் 4 பேர் படுகாயம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் பஸ்சும் சொகுசு காரும் மோதிக் கொண்ட விபத்தில்

பிரபாகரன் இவரின் மனைவி ரேணுகா தேவி-வயது
ரேணுகா தேவியின் தாயார் வேலம்மாள் வயது மற்றும் சங்கமித்ரா ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர்

பழனியில் இருந்து ஈரோடு நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 10:20 மணிக்கு ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது அப்போது கோவையில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி ஒரு சொகுசு கார் சென்றது இந்த காரில் 3 பெண்கள் உட்பட 4 பேர் வந்தனர்

இந்த நிலையில் இந்த கார் தாராபுரம் புறவழிச்சாலை ராம் நகர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்த போது தாராபுரம் புறவழிச் சாலையை கடந்து தாராபுரம் நகர் பகுதிக்கு செல்ல தனியார் பஸ் அதிக வேகத்தில் சாலையை கடந்தது. இந்த பஸ்சை திருச்செங்கோட்டில் உள்ள நாமகிரிப்பேட்டை சேர்ந்த
வீரமணி என்பவர் ஓட்டி வந்தார்.
அப்போது ஒட்டன்சத்திரம் உறவினரின் இறப்பு செய்தி கேட்பதற்காக சென்றுகொண்டிருந்த, காரின் முன் பகுதி மீது பஸ் மோதி இதில் கார் பஸ் இன் பக்கவாட்டில் கார் தரதரவென இழுத்துச் சென்றது. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்து காரில் பயணம் செய்த 4 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்தினால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இது குறித்து சி‌‌.சி.டிவி காட்சிகள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சாலை விபத்தில் பஸ் ஓட்டுநரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

மேலும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறும்போது:-

இங்கு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன இந்த பணிகள் மிக தொய்வாக நடைபெற்று வருவதால் வேகத்தடை டிவைடர் எதுவும் இல்லாததால் வெளியூரிலிருந்து வரும் வாகனங்களுக்கு குறுக்கே பிரியும் ரோடு தெரிவதில்லை இதனால் வாகனங்கள் அதிக வேகத்தில் வந்து அடிக்கடி மோதிக் கொள்கின்றன இதனால் உயிர் சேதம் ஏற்படுகிறது. ஆதலால் பழனி- தாராபுரம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் நகர், ஆகிய நான்கு பகுதிகளையும் இணைக்கும் இந்த சாலையை உடனே சாலை விரிவாக்கப் பணிகளை முடித்து. சிக்னல் வேகத்தடை டிவைடர் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி:-
முத்துகுமார்

மு.கிருபாகரன்,
தாராபுரம்-செய்தியாளர்,
திருப்பூர் மாவட்டம்

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button