தேசியம்

கொரோனாவால் நாடு திரும்ப முடியாத சூழல்: ஆன்லைனில் திருமணம் செய்த தம்பதி

தெலுங்கானா மாநிலம் கோட்டங்குடம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்லைன் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தெலுங்கானாவில் கோட்டங்குடம் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல் நபி என்பவரின் மகளுக்கும் சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் எம்பிஏ பட்டதாரி முஹம்மது அத்னான் கான் என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கழமை அன்று திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மண்டபத்தில் நிகழ்வுகள் திட்டமிடப்பட்டிருந்தன.

கொரோனா வைரஸ் பரவும் காரணத்தால் பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது போல சவுதி அரேபியாவிலும் கட்டுப்பாடு இருக்கும் நிலையில், மணமகன் தன் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அதனால் திருமணத்தை ஆன்லைனிலேயே செய்ய இரு வீட்டாரும் முடிவெடுத்து, குறித்த நாளில் மொபைல் வீடியோ கால் வழியாக திருமணம் நடைபெற்றது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button