உலகம்

கொரோனா வைரஸ் சுனாமி போன்ற அலையை ஏற்படுத்தும்: மலேசிய சுகாதார அமைச்சு எச்சரிக்கை

மலேசியாவில் கொரோனா வைரஸ், சுனாமி போன்ற அலையை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் அரசாங்கம் விதித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அமைச்சு அறிவுறுத்தி உள்ளது.

மலேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது. இன்று (மார்ச் 18) ஒரே நாளில் மேலும் 117 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 790ஆக ஏற்றம் கண்டுள்ளது.

இதே வேளை, 60 பேர் மருத்துவ சிகிச்சைக்குப் பின் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளவீட்ட இதற்கிடையே பொது நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை பாயும் என மலேசிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய குற்றங்களை புரிவோர்க்கு ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என சுகாதார அமைச்சர் டாக்டர் அதம் பாபா தெரிவித்துள்ளார்.

“சுனாமி போன்ற மூன்றாம் அலை உருவாக வாய்ப்பு”

மலேசியர்கள் அடுத்த இரு வாரங்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள பொது நடமாட்ட கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதார அமைச்சின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அறிவுறுத்தி உள்ளார்.

இல்லையெனில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், கட்டொழுங்கைப் புறக்கணித்தால் சுனாமி போன்ற மூன்றாம் அலையை கொரோனா ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அவற்றை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகளை மக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். அனைவரும் கூடுமானவரை வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறிய வாய்ப்பும் சக்தியும் மலேசியாவுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு தனி நபரும் தனது சுய நலனுக்காகவும், குடும்பத்தின் நலன்களுக்காகவும் செயல்பட வேண்டியுள்ளது. எனவே நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் பொறுப்பேற்று சுகாதார அமைச்சுக்கு உங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும்,” என்று நூர் ஹிஷாம் வலியுறுத்தி உள்ளார்.

வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்திய பிரதமர்

பொது நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலேசியர்கள் தங்களையும் குடும்பத்தாரையும் பாதுகாத்துக் கொள்ள வீட்ட

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button