சென்னை

கோரோனா நோய் தொற்று பயத்தில் திருமுல்லைவாயல் பகுதி நரிக்குறவர்கள்.உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

கோரோனா நோய் தொற்று பயத்தில் திருமுல்லைவாயல் பகுதி நரிக்குறவர்கள்.உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கோரோணா நோய் தொற்று பரவி அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.இந்தநிலையில் ஆவடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் நரிக்குறவ மக்கள் வசிக்கும் பகுதி உள்ளது இங்கு 50கும் மேற்பட்ட நரிக்குறவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கு மாநகராட்சி சார்பாக எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருமுல்லைவாயல் சுற்றுவட்டார பகுதிகளில் வீடு வீடாக கிருமி நாசினிகள் தெளிக்க பட்டது ஆனால் எங்கள் பகுதிக்கு இதுவரை யாரும் வந்து கிருமிநாசினி தெளிக்க வில்லை இதனால் தங்களுக்கு கோரோனா நோய் தொற்று பரவி விடுமோ என அச்சம் உள்ளது மேலும் ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளியில் செல்லமுடியாமல் உணவிற்கு சிரமமாக உள்ளது இதனையும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துதர அரசுக்கு வேண்டுதல் வைத்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button