தேசியம்

இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆனது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவர் இன்று காலை மரணம் அடைந்தார்.

இதையடுத்து, இந்தியாவில் கரோனா பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்த இத்தாலியைச் சேர்ந்த 69 வயது முதியவருக்கும், அவரது மகளுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் முதியவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

ஏற்கனவே இந்தியாவில் 4 பேர் மரணம் அடைந்த நிலையில் தற்போது, இத்தாலியைச் சேர்ந்த ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இந்தியாவில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக உயர்ந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button