மதுரை
ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு கொரானோ விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்,மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை மண்டலத்தில் 21.03. 2020 அன்று மதியம் 12 மணியளவில் நமது பொது மேலாளர் எஸ்.ராஜேஸ்வரன்மதுரை மண்டலம் அவர்கள் தலைமையில் நமது ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மதுரை சிஎஸ்ஐ நர்சிங் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மூலமாக கொரானோ வைரஸ் பரவுவதை எவ்விதத்தில் தடுக்க இயலும் என நமது பணியாளர்களுக்கு செய்து காட்டி கீழ்க்கண்ட முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
1.கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் முறை
2.மூச்சுப்பயிற்சி
3.இருமும்போதும், தும்மும்போதும் கடைபிடிக்க வேண்டியவை குறித்து விளக்கப்பட்டது



