சென்னை

செம்பரம்பாக்கம் ஊராட்சியில் தனியார் குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்தினரோடு ஒன்றிணைந்து தற்போதுள்ள சூழலுக்கு தன்னலமற்ற பணியாற்றும் அனைவரையும் பாராட்டி கைதட்டினர்

செம்பரம்பாக்கம் ஊராட்சியில் தனியார் குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்தினரோடு ஒன்றிணைந்து தற்போதுள்ள சூழலுக்கு தன்னலமற்ற பணியாற்றும் அனைவரையும் பாராட்டி கைதட்டினர் .

உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் பாரதம் மக்களிடமும் தமிழக மக்களிடமும் பரவாமல் இருக்க வேண்டி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சமூக தொற்று ஏற்படாமல் இருக்கவும் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களை சுய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் இதனை ஏற்றும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தைப் பற்றியும் எந்தவித சுயநலமும் இல்லாமல் இந்த நிலையிலும் பணிபுரிந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும் காவல்துறையினருக்கும் ராணுவத்தினருக்கும் அதிரடிப் படை வீரர்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கும் சமூக சேவகர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்குட்பட்ட செம்பரம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்பு வளாகத்தில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து கைதட்டி தங்களது பாராட்டு தெரிவித்தனர் இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன் மற்றும் தேவி, செம்பரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் , சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button