சென்னை

சென்னை ஆவடியில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க பள்ளியில் மைதானத்தில் காய்கறி சந்தையாக மாற்றிய ஆவடி மாநகராட்சி

சென்னை ஆவடியில் மக்கள் கூட்டம்
கூடுவதை தடுக்க பள்ளியில் மைதானத்தில் காய்கறி சந்தையாக மாற்றிய ஆவடி மாநகராட்சி.

இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில் மூன்றாம் நாளான இன்று ஆவடி அம்பத்தூர் திருநின்றவூர் போன்ற பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் தேவையான கடைகள் மட்டும் திறந்திருந்தது ஆவடி முழுவதும் தண்ணீர் டேங்க் மூலமாகவும் ஒப்பந்த ஊழியர் மூலமாகவும் 48 வார்டுகளிலும் கிருமிநாசினி தெளித்து தடுக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள் இதன் ஒரு பகுதியாக மக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறி மார்க்கெட் ஆவடி ரயில் நிலையம் செயல்பட்டு வந்த நிலையில் கொரோன வைரேஸ் தடுக்க தற்போது பொது இடங்களை மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதனால் ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் ஆவடி காய்கறி மார்க்கெட் மூன்று பிரிவாக பிரித்து தற்காலிகமாக ஆவடி காமராஜ் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளிகளும் காலை 6 மணி முதல் மதியம் 2 .30 மணிஅளவில் இயங்கும் என தெரிவித்து உள்ளது.இதனால்
பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவது தவிர்க்கமுடியும் கொரோனோ வைரஸ் பொது மக்கள் பாதுகாக்க வேண்டும். ஒவ்வொரு பொதுமக்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் எல்லா பொதுமக்களும் வரிசையில் நின்று இடைவெளிவிட்டு இந்தp கட்டங்களுக்கு நடுவே நின்று பொறுமையாக தன்னுடைய காய்கறி வாங்கி செல்கின்றனர்.
இதுபற்றி பொதுமக்கள் அவர்கள் கூறுவது தற்போது இந்த சூழ்நிலையில் காய்கறி விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இதை தமிழக அரசு விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அதே போல் தமிழரின் பாரம்பரிய மருந்து பொருட்களான நாட்டு மருந்து கடை தமிழகம் முழுவதும் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Show More

Related Articles

Back to top button