திருவள்ளூர்

வீடு வீடாகச் சென்று முக கவசங்களை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

வீடு வீடாகச் சென்று முக கவசங்களை வழங்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.

தமிழ்நாட்டில் குரானா தடுப்பு நடவடிக்கையாக 7வது நாளாக 144 தடை உத்தரவு நீடிக்கிறது.திருவள்ளுர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயல் பகுதியில் பல்வேறு சுகாதாரப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.குறிப்பாக அனைத்துப் பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இந்நிலையில்விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வீடாக சென்று பொதுமக்களுக்கு முககவசங்களை வழங்கி சுகாதாரமாக வீட்டுக்குள்ளேயே வசிக்க அறிவுரைகளை வழங்கினர். மேலும் பொது மக்களுக்கு ஏதேனும் தேவைகள் இருந்தால் அதனை உடனடியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் செய்து தரப்படும் என தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது முல்லைதமிழன், மு.வினோத், கா.இளங்கோவன்,
சிறுத்தை விஜி,
சரவணன்,
அரிகிருஷ்ணன்,
வேலாயுதம்,
தயாளன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Show More

Related Articles

Back to top button