சென்னை

ஆலயத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் தினந்தோறும் உணவு

திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோர்களுக்கு தனியார் கண் மருத்துவமனை சார்பில் தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையோரம் உள்ள ஆதரவற்றோரின் நிலை கேள்விக் குறியாகியுள்ளது.இந்த நிலையில் உணவில்லாமல் தவித்து வரும் ஆதரவாளர்களுக்கு பல்வேறு நல் உள்ளம் படைத்தவர்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் ஆவடியை சேர்ந்த பிரபல கண் மருத்துவமனையான போரா கண் மருத்துவமனை சார்பில் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயத்தை சுற்றியுள்ள ஆதரவற்றோருக்கும்,ஆவடியில் உள்ள ஆதரவற்றோர் என சுமார் 600 பேருக்கு தினந்தோறும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனை மருத்துவமனை நிர்வாகிகளுடன் திருவேற்காடு சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் சந்திர சேகர் வழங்கினார். இதே மாலை பண்ணும் வழங்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button