அம்பத்தூரில் வௌவால் செத்து கிடப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

அம்பத்தூரில் வௌவால் செத்து கிடப்பது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது.இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகத்தில் காணப்படும் 2 வகையான வௌவால்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வில் கூறப்பட்டது. இதற்கிடையில் சென்னை மாநகராட்சி 7வது மண்டலத்திற்கு உட்பட்ட அம்பத்தூர் ராம் நகர் பூங்கா அருகில் வௌவால் ஒன்று இறந்த நிலையில் சாலையில் உள்ளது.இந்த வௌவால் கரோனா வைரஸ் தாக்கி இறந்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வௌவால் கரோனா வைரஸக்கும் மனிதர்களுக்கு தற்போது பரவிவரும் வைரஸ்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்கள் இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



