ரஜினிகாந்த் கட்சி துவங்குவதால் திராவிட கழகத்திற்கு அல்ல மதவாத சக்திகளுக்கும் நடிகர்களுக்கு ஆபத்தும் பின்னடைவு ஏற்படும் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா

ரஜினிகாந்த் கட்சி துவங்குவதால் திராவிட கழகத்திற்கு அல்ல மதவாத சக்திகளுக்கும் நடிகர்களுக்கு ஆபத்தும் பின்னடைவு ஏற்படும் மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்..
பட்டாபிராம் இரயில்வே மேம்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பட்டாபிராம் அருகே நெமிலிச்சேரியில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக துணை செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா, சென்னை முதல் திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பட்டாபிராம் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கடந்த 2010 ஆம் ஆண்டு திட்டமதிப்பீடு செய்யப்பட்டு 2016 முதல் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி மிகவும் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகள், வாகனங்கள் அனைத்தும் கிராமப்புற சாலை வழியாக செல்வதால் பெரும் விபத்து ஏற்படுவதாக தெரிவித்தார். மாநில அரசு பட்டாபிராம் இரயில்வே மேம்பாலத்தை வேகமாக அமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினி கட்சி தொடங்குவதால் மதவாத சக்திகளுக்கு ஆபத்தும் நடிகர்களுக்கு பின்னடைவும் ஏற்படும் என கூறினார்…. நடிகராக பார்க்ககூடிய ரஜினியை தலைவராக பார்க்க முடியாது எனறார்.. விமானத்தில் பிறந்தநாளை கொண்டாடும் வசதியான ரஜினி ஏழை மக்களின் தலைவராக இருக்க முடியாது என அவர் தெரிவித்தார்…..
பேட்டி: மல்லை சத்யா
மதிமுக, துணை பொதுச் செயலாளர்





