சென்னை

பாரம்பரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் வாடிக்கையாளர்களைக் கவரும் பூவிருந்தவல்லி நாவலடி கொங்குநாடு ஹோட்டல்

கொரோனா வைரஸ் எதிரொலி பாரம்பரிய தடுப்பு நடவடிக்கைகளுடன் வாடிக்கையாளர்களைக் கவரும் பூவிருந்தவல்லி நாவலடி கொங்குநாடு ஹோட்டல்

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக மார்ச் 31ம் தேதி வரை அரசு பள்ளிகளுக்கு விடுமுறையும், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் அனைத்தும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த நிலையில் அசைவ உணவுகள் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிட வேண்டியதை தவிர்க்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் வேகமாக பரவி வருகிறது இந்த நிலையில் பூந்தமல்லியில் உள்ள நாவலடி கொங்குநாடு உணவகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பாரம்பரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இங்கு ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு முதலில் கைகளை கழுவ திரவம் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹோட்டல் வாசல் முன்பு வேப்பிலை போட்டு வைப்பதுடன் தண்ணீரில் மஞ்சள் கலந்து வாசலில் தெளிப்பது. தண்ணீரில் எலுமிச்ச பழச்சாறு மஞ்சள் அதிலும் கை கழுவப்பட்டும் கடை முழுக்க சாம்பிராணி புகை போடப்பட்டு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி ஹோட்டலில் உணவருந்த வருபவர்களுக்காக ஹோட்டலில் பாடல்களுக்கு பதிலாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த வாசகங்கள் ஒலிபெருக்கியில் ஒலித்தபடி இருக்கிறது.

Show More

Related Articles

Back to top button