சென்னை
கிருமிநாசினி சுரங்க அறை

பூந்தமல்லி போலீசார் சார்பில் கிருமிநாசினி சுரங்க அறையை இணை கமிஷனர் விஜயகுமாரி திறந்து வைத்தார்.
பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரில் பூந்தமல்லி போலீசார் கிருமி நாசினி தெளிக்கும் சுரங்க அறை போன்ற ஒன்றை உருவாக்கி உள்ளனர்.இதில் மூன்று பகுதியிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளே நடந்து வரும் நபர்கள் மீது குளியல் அறையில் சவரில் குளிப்பது போல் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
அந்த வழியே வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை இந்த அறைக்கு உள்ளே வரவழைத்து அவர்கள் மீது கிருமிநாசினி தெளித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர்.



