அறிவியல்தேசியம்

பப்ஜி உள்பட 52 ஆப்களுக்கு தடை?….

பப்ஜி உள்பட 52 ஆப்களுக்கு தடை?….

மத்திய அரசிடம் உளவு அமைப்புகள் கோரிக்கை ஒன்றை முன்வைத்தது. அதாவது, சீனாவுடன் தொடர்புடைய 52 மொபைல் செயலிகளை தடை செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளது. இந்த செயலிகளின் மூலம் இந்தியா குறித்த பல தரவுகள் கடத்தப்பட வாய்ப்பிருப்பதாகவும், எனவே இந்த செயலிகள் இந்தியாவுக்கு பாதுகாப்பனவை கிடையாது என தெரிவித்துள்ளது. ஜும், வீடியோ செயலி, டிக் டாக், யுசி புரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர், xender, ஹலோ, டிக்டாக், பியூட்டி ப்ளஸ், கிளாஷ் ஆப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், பிகோ லிவ் உள்பட 52 செயலிகளை தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த பரிந்துரை மீது ஆலோசனை நடப்பதாகவும், இந்த செயலிகளின் மூலம் எந்த மாதிரியான ஆபத்து ஏற்படும் என்பது குறித்து ஒன்றன் பின் ஒன்றாக பரிசோதனை செய்யப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button