மாநிலம்

அம்மா நலமாக உள்ளார் – எஸ்.ஜானகி மகன் தகவல்

அம்மா நலமாக உள்ளார் – எஸ்.ஜானகி மகன் தகவல்

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(82). 60 ஆண்டுகளாக சினிமாவில் கான குயிலாகவே பாடி பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார். வயது மூப்பு காரணமாக பாடுவதை நிறுத்திக் கொண்டார். ஐதராபாத்தில் வசித்து வரும் இவரின் உடல்நலம் பற்றி அவ்வப்போதுசில தவறான தகவல்கள் உலா வரும். அப்படித்தான் இப்போதும் அவரைப்பற்றி தவறான செய்தி ஒன்று சமூகவலைதளங்களில் உலா வந்தது.

இதனை மறுத்துள்ள ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா, “அம்மாவிற்கு சிறிய அளவிலான ஆபரேஷன் ஒன்று நடந்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம், அம்மா நலமாக உள்ளார் என தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button