சென்னை

அம்பத்தூரில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட வாலிபர் பரிதாபம்

சென்னை அம்பத்தூர் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட காவல் உதவி ஆய்வாளர் மகனை அரிவாளால் வாலிபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அம்பத்தூரில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட வாலிபர் பரிதாபம்

சென்னை அம்பத்தூர் அடுத்த சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர்.மகேஷ் போக்குவரத்து காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார்.இவரது மகன் யுவராஜ் அதே பகுதியில் சிமென்ட்,மணல், ஜல்லி ஏஜென்சி வைத்து நடத்தி வருகிறார். அதேபோல் அம்பேத்கர் இயக்கத்தில் நிர்வாகியாகவும் உள்ளார்.இந்த நிலையில் சணுமுகபுரம் பகுதியில் அங்குள்ள ஒரு சில வாலிபர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி கஞ்சா விற்பனையும் செய்துள்ளனர். இதனை யுவராஜ் தட்டிக்கேட்டதுடன் காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்துள்ளார்.இதனால் கடந்த வாரம் அங்குள்ள கஞ்சா விற்பனையாளர்களுக்கும் யுவராஜுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த அதே பகுதியை சேர்ந்த யுவராஜ்/23, கார்த்தி/20, சூர்யா,பென்னி ஆகிய நான்கு பேரும் வீட்டின் அருகே நடந்து சென்ற போது இருசக்கர வாகனத்தில் வந்து சரமாரியாக வெட்டி செய்துள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த யுவராஜ் உயிர் இழந்தாக என்னி அங்கிருந்து நான்கு பேரும் தப்பி சென்றனர்.இதையடுத்து உயிருக்கு போராடிய யுவராஜை மீட்டு அவரது தம்பி முகேஷ் மீட்டு கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அம்பத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய நான்கு பேரையும் தேடி வருகின்றனர். கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட நபர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button