பழையனூர் ஊராட்சியில் ஏரி தூர்வாரும் பணியில் முறையாக செயல்படாததால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு.

பழையனூர் ஊராட்சியில் ஏரி தூர்வாரும் பணியில் முறையாக செயல்படாததால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவுக்கு உட்பட்ட திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது பழையனூர் கிராம்ம்.இங்கு உள்ள ஏரியை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில் தூர் வாரி கரைகளை பலப்படுத்தும் பணி ரூபாய் 40 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பணியை முறையாக டெண்டர் விடாமல் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பழையனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று நடைபெற்று வந்த ஏரி பணியை பாதியில் தடுத்து நிறுத்தி அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிராம மக்கள் அனுமதி இல்லாமல் முறையாக டெண்டர் விடாமல் ஏரி தூர்வாரும் பணி செய்யப்பட்டதால் இதனை நிறுத்த வேண்டும் என கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து ஏரி தூர்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து திருவாலங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பழையனூர் பகுதியில் இன்று சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.


