திண்டுக்கல்

ஊரடங்கினை சமாளிபதில் சிக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தொழிலை நம்பியிருந்த மக்கள் ஆகஸ்ட் மாதம் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை சமாளிபதில் சிக்கல்

தமிழகத்தில் உள்ள புகழ் பெற்ற மலை வாசஸ்தலமான கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான மக்கள் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வந்தனர் இந்நிலையில் சுற்றுலா சீசன் காலங்களான ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் கொரோனா நோய் தொற்றினால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதில் தங்களது பெரிதளவில் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது 5 வது மாதமாக சுற்றுலா பயணிகள் வர தடை நீடிப்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளை மட்டுமே நம்பியிருந்த வியாபாரிகள், புகைப்படக்கலைஞர்கள்,குதிரை ஓட்டுனர்கள், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஓட்டல் தொழிலார்கள் உள்ளிட்டோர் வருமானால் ஈட்ட முடியாமல் தவித்து வந்தனர் ஆனால் தற்போது வரை அரசின் எந்த ஒரு நிவாரணமும் தங்களுக்கு கிடைக்காத நிலையில் மேலும் நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் சுற்றுலா பயணிகள் வர தடை நீடிப்பதால் கொடைக்கானல் மக்கள் இந்த ஆகஸ்ட் மாத ஊரடங்கினை சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனவே அரசு சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பி இருந்த தங்களுக்கு உரிய நிவாரணங்களை தந்து தங்களை காப்பாற்றிட உதவி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Show More
Back to top button