கள்ளக்குறிச்சி
சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு!

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது காதலி சௌந்தர்யாவை கரம்பிடித்தார்.கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு . 34 வயதான இவர் தியாகதுருகம் பகுதியைச் சேர்ந்த சௌந்தர்யா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு-வுக்கும் காதலி சௌந்தர்யாவுக்கும் இன்று திடீர் திருமணம் நடைபெற்றது.தியாகதுருகத்தில் உள்ள அவரது இல்லத்தில் எம்எல்ஏவின் பெற்றோர்கள் தலைமையில், சாதிமறுப்பு திருமணம் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இதையடுத்து எம்எல்ஏ பிரபு – சௌந்தர்யா தம்பதிக்கு அதிமுக நிர்வாகிகள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.


