தேசியம்

இந்தியாவில் 77 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 77,06,946 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 68,74,518 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

நாடு முழுவதும் 7,15,812 பேர் தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.  1,16,616 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக 55,839 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

79,415 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 702 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் சதவீதம் 89.20 ஆகவும், இறப்பு சதவீதம் 1.51 ஆகவும் உள்ளது. 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 9,86,70,363 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,69,984 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button