ஆவடியில் விஸ்வ இந்து பரிஷ்த் சார்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆவடியில் விஸ்வ இந்து பரிஷ்த் சார்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சமூக வலைத்தளங்களில், கருப்பர் கூட்டம் என்ற பெயரில் இயங்கி வரும் யூடியூப் சேனலில், இந்து தெய்வங்களையும், வழிபாட்டு முறைகள் மற்றும் புனித நூல்களை இழிவுபடுத்தும் விதமாகவும், ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டுவது போன்ற வீடியோ வெளியிடப்பட்டது. பிறர் மனதைப் புண்படுத்தும் விதமாக பேசி வரும் கருப்பர் கூட்டத்தின் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி விஸ்வ இந்து பரிசுத்த அமைப்பின் சார்பில் ஆவடி ரயில் நிலையம் அருகே திருமலை ராஜபுரத்தில் உள்ள திருச்செந்தில் வேல்முருகன் ஆண்டவர் திருக்கோயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டசெயலாளர் சதிஷ் ஜி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளிவிட்டு கந்தசஷ்டிகவசம் பாடல்களைப் பாடி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், மகளிர் அணி அமைப்பாளர் சரசா பிள்ளை, இணைச் செயலாளர் சண்முகம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



