தேசியம்
காங்கிரஸ் சந்திக்கும் தொடர் பின்னடைவுகள்
காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விகளால் அதிருப்தியில் உள்ள இளம் தலைவர்கள், கட்சியிலிருந்து விலகும் முடிவில் உள்ளனர்.
மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகப்போவதாக அறிவித்துவிட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டார். பா.ஜ.க-வில் இணையப்போகிறாரா அல்லது புதிய கட்சி தொடங்கப்போகிறாரா என்று தெரியவில்லை. மம்தா பானர்ஜி தொடங்கி தற்போது ஜோதிராதித்யா சிந்தியா வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மாநிலத் தலைவர்களின் பட்டியல் ஏராளம். இரண்டு பொதுத் தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த காங்கிரஸ் கட்சிக்கு, இது மேலும் பின்னடைவாகவே அமைந்துள்ளது.



