சென்னை
தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ஆனந்தன் வாழ்த்து தெரிவித்த கவுரவித்தார்

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர் டாக்டர் ஆனந்தன் வாழ்த்து தெரிவித்த கவுரவித்தார்…
8வது தேசிய அளவிலான மாபெரும் கராத்தே போட்டி கோவாவில் நடைபெற்றது… தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பங்கேற்ற இந்த போட்டியில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த மாணவ மாணவிகள் 8 பேர் பங்கேற்றனர்… இதில் சிறப்பாக விளையாடி தங்கம் மற்றும் வெள்ளியை பரிசாக பெற்று தமிழகம் திரும்பினர்… இந்த நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை உச்சிநீதிமன்றம் வழக்கறிஞர் டாக்டர் ஆனந்தன் நேரில் வாழ்த்து தெரிவித்து கவுரவித்தார்… இந்த நிகழ்வில் கராத்தே மாஸ்டர் எஸ். ராஜா, மற்றும் பயிற்சியாளர் சங்கீதா ஆகியோர் உடன் இருந்தனர்….



