செங்கல்பட்டு

உலக மகளிர்தினகொண்டாட்டம்

உலக மகளிர் தின நிகழ்ச்சி
HABITAT மற்றும் IRDRP இனைந்து நடத்திய “உலக மகளிர்தினகொண்டாட்டம்”
செங்கல்பட்டு 08 மார்ச் 2021 செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுக்கவில் உள்ள ஒரகடம் பஞ்சாயத்தில் வைத்து “உலக மகளிர் தினம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரகடம் கிராமத்தில் உள்ள வீடுகளில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பிறகு சுமார் 10:30 மணிக்கு இறைவணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. இதில் மகளிரின் முன்னேற்றம் குறித்தும் பெண் உரிமை குறித்தும் பேசப்பட்டது. பெண்கள் அனைவரும் மிகவும் ஊற்சாகத்துடன் இக்கூடுகையில் கலந்து கொண்டனர்.
HABITAT INDIA நிறுவன தலைவர் திரு சாம் பீட்டர் அவர்களும் நிறுவன பொறுப்பாளர்களும் IRDRP நிறுவன தலைவர் திரு இருதயசாமி அவர்களும் நிறுவன தலைவர் திரு முருகேசன் (DET) அவர்களும் நிறுவன தலைவர் திரு ஆரோன்(Rhema foundation) அவர்களும் கலந்து கொண்டனர். கிராம மக்கள் திரளாய் கலந்த கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரேமா பவுண்டேஷனின் தலைவர் திரு ஆரோன் அவர்களுக்கு கொரோனா தொற்று காலத்தில் இருளர் பழங்குடி மக்கள் மத்தியில் சிறப்பாக பணிசெய்ததற்காக அவரை கவுரவித்து நினைவுச்சான்று வழங்கப்பட்டது. நினைவுச்சான்றை HABITAT INDIA நிறுவன தலைவர் திரு சாம் பீட்டர் அவர்களும் IRDRP நிறுவன தலைவர் திரு இருதயசாமி அவர்களும் வழங்கினர். தேசிய கீதம் பாடிய பின் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

Show More

Related Articles

Back to top button