மாநிலம்
எம்.ஜே.அப்பாஜி அணி முதல் பரிசை தட்டிச்சென்றது

எம்.ஜே.அப்பாஜி அணி முதல் பரிசை தட்டிச்சென்றது
மைசூர் பேப்பர் மில்ஸ் நிறுவனத்தின் எஃப்சி தபனா பாய்ஸ்
அணி சார்பில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான தாலுகா அளவிலான கால்பந்து போட்டி தொடங்கியது. போட்டியை 97-வது மத்திய அதிவிரைவு படையைச் சேர்ந்த கமாண்டர் ப்ரீதா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி பந்தை உதைத்து தொடங்கி வைத்தார். மத்திய அதிவிரைவு படையை சேர்ந்த ஷாஜன், எம்.பி.எம்.ஐ. அணியை சேரந்த ரமேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
20-ந்தேதி தொடங்கிய இந்த போட்டி தொடர்ந்து 2 நாட்களாக நடைபெற்றது. இந்த போட்டியில் எம்.ஜே. அப்பாஜி அணி முதல் பரிசு பெற்றது.



