திருவள்ளூர்

ஜெ. பொம்மை சவப்பெட்டி, நீட் அனிதாவின் போலி வீடியோ… தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் மாஃபா பாண்டியராஜன்

ஜெ. பொம்மை சவப்பெட்டி, நீட் அனிதாவின் போலி வீடியோ… தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் மாஃபா பாண்டியராஜன்
ஜெயலலிதா உருவம் பொதித்த சவப்பெட்டி பிரசாரத்தை தொடர்ந்து, நீட் அனிதாவின் அதிமுக ஆதரவு போலி வீடியோ மூலம், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.

ஜெ. பொம்மை சவப்பெட்டி, நீட் அனிதாவின் போலி வீடியோ… தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் மாஃபா பாண்டியராஜன்

நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம், தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் கணக்கில், ஞாயிறு காலையில் வீடியோ ஒன்று வெளியானது. அதில், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா, அதிமுகவிற்கு ஆதரவாக பேசுவது போல, போலியாக பின்னணி குரல் கொடுத்து சித்தரிக்கப்பட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது
வெளியான சில நிமிடங்களிலேயே இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டன குரல்கள் எழுந்தன. குறிப்பாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம், நீட் எதிர்ப்பின் அடையாளமாக விளங்கும் அனிதாவின் மரணத்தை வைத்து இவ்வாறு வீடியோ வெளியிட்டது மிகுந்த மனவேதனை அளிப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்த வீடியோ பதிவை அமைச்சர் பாண்டியராஜன் உடனடியாக நீக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த அவர், தனது அனுமதியின்றி ட்விட்டரில் அந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளதாகவும், பதிவிட்டரை அறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்தார்.
ஆனால், அவரது விளக்கத்தை ஏற்க முடியாது என அனிதாவின் சகோதரர் மணிரத்னம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தேர்தல் இறுதிகட்டத்தில் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது மாஃபா பாண்டியரஜானுக்கு புதிதல்ல. ஏற்கனவே 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, ஓபிஎஸ் அணியில் இருந்த பாண்டியராஜன், ஜெயலலிதாவின் உருவம் பொதித்த பொம்மை சவப்பெட்டியுடன் பிரசாரம் செய்தது அனைத்துத்தரப்பினரையும் முகம் சுளிக்க வைத்தது.

ஓட்டுக்காக அமைச்சர் பாண்டியராஜன் இப்படி ஆகிவிட்டாரே என்று சமூக வலைதளங்களில் பலரும் ஆதங்கத்தை வெளிபடுத்தும் சூழலில், இந்த சர்ச்சை வீடியோ தொடர்பாக சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கப்படுமென பாண்டியராஜனும் பதிலளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button