விழுப்புரம்
திருமணம் எளிமையாக நடைபெற்றது

தமிழக அரசு 144 தடை மட்டும் ஊரடங்கு விதித்ததைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் திருவெண்ணெய் நல்லூரில் உள்ள ஈஸ்வரன் கோயில் மிக எளிமையாக நடைபெற்றது பத்து நிமிடம் மட்டுமே நேரம் விதிக்கப்பட்ட நிலையில் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டார் தரப்பில் தலா 4 பேர் மட்டுமே பங்குபெற்ற எளிமையான திருமணம் நடைபெற்றது விழுப்புரம் செல்போன் நிறுவனத்தில் பணியாற்றும் முரளிதரன் என்பவருக்கும் மீனா என்பவருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது அரசு விதித்த ஊரடங்கு சட்டத்தின் அடிப்படையில் இன்று பெற்றோர்கள் முன்னிலையில் கோயிலில் திருமணம் எளிமையாக நடைபெற்றது
