முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் புதிதாக பதவியேற்றுள்ள பேரூராட்சித் தலைவர்
ஸ்ரீபெரும்புதூரில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் புதிதாக பதவியேற்றுள்ள பேரூராட்சித் தலைவர் செயல்பட்டு வருவது திமுக தொண்டர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகள் ஒதுக்கப்பட்டன. இதில் ஸ்ரீ பெருமந்தூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் சார்பில் செல்வமேரி அருள்ராஜ் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு தலைவர் பதவிக்கு ஆசைப்பட்ட திமுகவினர் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர செயலாளர் மனைவியை போட்டியிட செய்து வெற்றி பெற செய்தனர்.இதனிடையே தலைமையின் உத்தரவை மீறி கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்து தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால் இதனை சற்றும் கண்டுகொள்ளாத ஸ்ரீபெரும்புதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால்,ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய பெருந்தலைவர் கருணாநிதி ஆகியோர் நமது பின்னால் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இருக்கிறார். தலைமையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என நகரச் செயலாளர் சதிஷிக்கு நம்பிகை கொடுத்து அவரிடமிருந்து பெற வேண்டியதை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகின்றது.நமது பின்னால் கட்சியினர் ,அமைச்சர் இருக்கும் தெம்பில் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி திமுகவினர் தலைமைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.தலைமை பதவி விலகக் கோரியும் தலைவர் பதவி நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்து புதிதாக பதவியேற்ற பேரூராட்சி நகரமன்றத் தலைவர் சாந்தி தனது ஆதரவாளர்களுடன் பேரூராட்சியில் கூட்டத்தை கூட்டியுள்ளார். பல இடங்களில் இதுபோன்று தலைமை உத்தரவை மீறி செயல்பட்டவர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால் விடும் வகையில் ஸ்ரீ பெருமந்தூர் பேரூராட்சி தலைவி செயல்பட்டு வருவது காங்கிரஸ் மற்றும் திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.