சென்னை
துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் ஆவடி காவலர் குடியிருப்பு பகுதியில் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், வைரஸ் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆவடி காவலர் குடியிருப்பு பகுதியில் துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகழுவுதல் உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



