வந்தவாசி அருகே தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது

வந்தவாசி அருகே தேவாலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில்
எளியமுறையில் இரு வீட்டார் சம்மதத்துடன் இன்று மாலை 6 மணி அளவில் திருமணம் நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் தேவராஜ் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே T.K. மண்டபம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகள் கலைச்செல்வி ஆகிய இருவருக்கும் இன்று வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூர் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடம் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளதாக இருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பித்தால் திருமண மண்டபத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்டது
இதையடுத்து திருமண வீட்டார்கள் எளிய முறையில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு வந்தவாசி அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் (சர்ச்)ல் எளிய முறையில் 20 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டு திருமணம் நடைபெற்றது.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தேவாலயத்துக்கு வந்த திருமண வீட்டாருக்கு கையில் கிருமிநாசினி திரவம் வழங்கினார்.
பின்னர் மணமகன் முக கவசம் அணிந்து கொண்டு கிறிஸ்துவ முறைப்படி மணமகள் கழுத்தில் தாலி சங்கிலி மாட்டினார் இந்த எளிய திருமணத்தில் உறவினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டு இருந்தனர்.



