அரசு அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் பழங்குடியின மக்கள்….!

நீண்ட நீண்ட காலம் , நீ நீண்டு வாழ வேண்டும் என அரசு அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கும் பழங்குடியின மக்கள்….!
பூவிருந்தவல்லி வட்டாட்சியர் ஆக பதவி வகித்து வருபவர் குமார்.
தன்னலமற்ற பொது நல சேவையில், பூவிருந்தவல்லி வட்டத்திலேயே முதன்மையாக திகழ்பவர் வட்டாட்சியர் குமார் என்று பழங்குடியின மக்களால் போற்றப்பட்டு வருகிறது.
ஏதோ கடமைக்கு பணிசெய்து ஊழியம் பெற்று குடும்பத்தினர் காப்பாற்றுவது அல்ல இவரது பணி…
கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த பழங்குடியின மக்களின் நிலையை அறிந்த வட்டாட்சியர் குமார் தனது சொந்த செலவில் படூர் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கியதுடன், நோய்த்தடுப்பு சத்து மாத்திரைகளையும், உபகரணங்களையும், முக கவசங்களையும், வழங்கி தனது குடும்பத்தினரை போல் நோய் பரவாமல் பழங்குடியினரை பாதுகாத்து உள்ளார்.
பெயரளவிற்கு பழங்குடியின மக்களை குடும்பம் என்று வாய் வார்த்தையால் கூறாமல், அதனை மெய்யாக நிரூபிக்கும் பொருட்டு, அவர் தனது பிறந்த நாளையே படூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் மக்களுடன் இணைந்து கொண்டாடியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவிக்கும் வட்டாட்சியர் குமாருக்கு, பழங்குடியின மக்கள் தங்கள் நன்றியை பாடலாகப் பாடி வாழ்த்தியுள்ளனர்..
நீண்ட நீண்ட காலம் நீ நீண்டு வாழ வேண்டும்..





