சென்னை
சென்னை அரும்பாக்கம் வாலிபருக்கு கொரோனா வைரஸ்

சென்னை அரும்பாக்கம் வாலிபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதை அடுத்து
அவருடன் தங்கிய 7 வாலிபர்கள் பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்டு வார்டில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
7 பேருக்கும் எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில் 14 நாட்கள் 7 பேரையும் மருத்துவர்கள் கண்காணிக்க உள்ளனர். முன்னதாக 7 பேரையும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து பின்னர் பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.
பூவிருந்தவல்லி பொது சுகாதார நிறுவனத்தில் அரும்பாக்கத்தை சேர்ந்த 7 வாலிபர்கள் உட்பட 18 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.



