மாநிலம்

கொரோனா இல்லாத மாநிலம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை; கடந்த பிப்ரவரி மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை திரும்பியுள்ளார். அப்போது காய்ச்சல் மற்றும் இருமல் தொடர்பான புகார்களுடன் ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் வாயிலாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது: கொரோனா வைரஸ் தொற்று டெஸ்ட் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இது நமது மாநிலத்திற்கு நல்ல செய்தி. தமிழ்நாடு சுகாதாரத்துறையின் துல்லியமான சிகிச்சை மற்றும் நிபுணத்துவத்தால் மட்டுமே இந்த விரைவான மீட்பு சாத்தியமானது, தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு கொரோனா இல்லாத மாநிலமாக மாறியுள்ளது” என்றார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button