நீலகிரிமாவட்டம்

நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி

சென்னை, மார்ச் 11: நீலகிரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்றும், மத்திய அரசு அனுமதி பெற்று நிறைவேற்றப்படும் என்றும் முதல்வர் கூறினார்.
சட்டசபையில் இன்று வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது முதல்வர் குறுக்கிட்டு கூறியதாவது:-
மலைவாழ் மக்கள் எளிய முறையில் மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காகவே நீலகிரியில் மருத்துவக் கல்லூரி எனவும் விதிகளின் அடிப்படையில் அங்கு வெட்டப்படும் ஒவ்வொரு மரங்களுக்கு பதிலாக தலா பத்து மரங்கள் நடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து தாமோ.அன்பரசன் பேசுகையில் , நீலகிரியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் மரங்களை வெட்டாமல், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடங்களில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நீலகிரி மலைப்பகுதி என்பதால் அங்குள்ள மக்கள் எளிய முறையில் சிகிச்சை பெறவே அங்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வருவாய்த்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களை ஆய்வு செய்த பின்னரே இடம் தேர்வு செய்யப்பட்டதாகவும் அங்குள்ள ஒரு சில மரங்கள் வேட்ட சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருப்பதாகவும் அனுமதி கிடைத்தவுடன் கட்டடங்களுக்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் விதிகளின் அடிப்படையில் ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு பதிலாக பத்து மரங்கள் நடப்படும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் .

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button