சென்னை
திருமண பரிசாக கொரோனா தடுப்பு மாஸ்க்

கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண விழாவில் மணமக்களுக்கு திருமண பரிசாக வித்தியாசமான முறையில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தினர் கொரோனா தடுப்பு மாஸ்க் வழங்கினர்..
பல நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் கொரோனா வைரஸை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமணவிழாவில் பங்கேற்ற தென்னிந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் மணமக்களுக்கு கொரோனா தடுப்பு மாஸ்குகளை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்



