திராவிடர் கழகம் தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும்

பொய் வழக்குகள் போட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொண்டர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த இயக்கத்தின் செயலாளர் கோவை. இராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்வழக்கு புனையப்பட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பத்து பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதனை கண்டித்து ஆவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட கோவை. இராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. அதுபோன்ற ஒரு சம்பவமே நடைபெறவில்லை. ஆடிட்டர் குருமூர்த்தி வீடு உள்ள தெருவில் இரண்டு பேர் சென்றனர். அவ்வளவு தான் நடந்தது. ஆனால் பெட்ரோல் குண்டு வீசியதாக 10 பேர் மீது பொய்வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும் என்றார்.



