ஈரோடு

ஈரோட்டில் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேருக்கு கரோனா அறிகுறி

ஈரோட்டில் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஈரோடு வட்டம் கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஏழு நபர்கள் ஈரோட்டில் தங்கி யிருந்தனர். அதில் இரண்டு நபர்களுக்கு காய்ச்சல் இருப்பதாக தெரியவந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது தெரியவருகிறது. 

மீதம் ஐந்து நபர்கள் கொல்ல ம்பாளையத்தில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்கப் பெற்றதன் பேரில் வருவாய் கோட்டாட்சியர், சுகாதாரத் துறையினர், காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினரால் தங்கியிருந்த 5 நபர்களை பெருந்துறை ஐ.ஆர்.டி.டி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button