தேசியம்

உறுதிமொழி ஏற்ற பின்னர் பேசுகிறேன்

Guwahati: 

முன்னாள் தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாயை, மாநிலங்களவை உறுப்பினராகக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த நியமனத்தைத் தான் ஏன் ஏற்றுக்கொண்டேன் என்பது தொடர்பாக உறுதி மொழி ஏற்ற பின்னர் கூறுகிறேன் என்று ரன்ஜன் கோகாய் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அஸ்ஸாமில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் தலைமை நீதிபதி ரன்ஜன் கோகாய், நாளை நான் டெல்லி சென்று முதலில் உறுதி மொழி ஏற்றுக்கொள்கிறேன். பின்னர், ஊடகங்களுக்கு நான் ஏன் இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டேன் என்பது தொடர்பாகக் கூறுகிறேன் என்றார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 13 மாதங்களாகப் பொறுப்பு வகித்த ரன்ஜன் கோகாய், கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இருந்தபோது, 2018 ஜனவரியில் முதன்முதலில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய நான்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் இவரும் ஒருவர் ஆவார். நீதிபதி தீபக் மிஸ்ரா தனக்கு “விருப்பமான நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்குவதாகவும், “ஜூனியர் நீதிபதிகளுக்கு முக்கியமான வழக்குகளை ஒதுக்குவதாகவும் அப்போது, அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

மாநிலங்களவைக்கு இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூகசேவை உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கும் 12 பேரை நியமன உறுப்பினராக நியமிப்பது வழக்கம். இதுவரை மாநிலங்களவைக்கு எந்தவொரு தலைமை நீதிபதியும் குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்பட்டதில்லை.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button