சென்னை
காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கு வினியோகம்

ஆவடி மாநகராட்சியில்
காய்கறிகள் நேரடியாக வீட்டிற்கு வினியோகம் செய்ய ஏற்பாடு- மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் .
ஆவடி மாநகராட்சி பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின்படி வீட்டிற்கே நேரடியாக காய்கறிகளை விநியோகம் செய்யும் விநியோகஸ்தர்களின் விவரங்களை ஆவடியில் உள்ள 48வார்டுகளில் பகுதிவாரியாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட கடைக்கு தொடர்பு கொண்டு காய்கறிகளை ஆடர் செய்தால் உரிய விலைக்கே வீட்டிற்குக் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.






