சென்னை

மாதர்பாக்கத்தில் இடி தாக்கி இருவர் உயிரிழப்பு.

கும்மிடிப்பூண்டி: 09.04.20
மாதர்பாக்கத்தில் இடி தாக்கி இருவர் உயிரிழப்பு. ஒரே கிராமத்தில் இருவர் உயிரிழந்ததால் கிராம மக்கள் சோகம்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. மாதர்பாக்கத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விஜயன் என்பவர் மீது இடி தாக்கியதில் உயிரிழந்தார். இதே போல மீன்பிடித்து கொண்டிருந்த பூஜ்ஜியம்மா என்ற பெண்ணின் மீதும் இடி தாக்கியதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த பாதிரிவேடு போலீசார் இருவரது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே கிராமத்தில் இடி தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Show More

Related Articles

Back to top button