கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய ஒன்றிய துணை தலைவர்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய ஒன்றிய துணை தலைவர்
பூவிருந்தவல்லி அருகே படூர் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடு,வீடாக 25 கிலோ அரிசி,10 வகையான காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
பூவிருந்தவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை,எளிய மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்டுகள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் ஜெயந்தி முரளி தலைமையில் பூவிருந்தவல்லி ஒன்றிய குழு துணை தலைவர் பரமேஷ்வரி கந்தன் பாதிக்கப்பட்ட 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி ,ஒரு வாரத்திற்கு தேவையான 10 வகை காய்கறிகளை அடங்கிய மளிகை தொகுப்பை வழங்கினார்.தொடர்ந்து அங்குள்ள மக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் பூவிருந்தவல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் அகஸ்டின் ராஜ் ,வார்டு உறுப்பினர் கிரன், ஊராட்சி செயலர் வேலாயுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



