திருமணம் எளிய முறையில் நடைபெற்றது

கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளிவிட்டுஆவடி அருகே திருமலை நகரில் உள்ள ஸ்ரீ பாளையத்தம்மன் கோவிலில் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது.
சென்னை ஆவடி அருகே திருமலை நகரில் திருமலை நகர் அசோசியேசன் தலைவர் ஆறுமுகம் ரேவதி தம்பதியரின் மகன் மணிகண்டக்கும், தாட்சாயினிக்கும் திருமணம் நடத்த மூன்று மாதங்களுக்கு முன்பே நிச்சயம் செய்யப்பட்டது. இதற்காக திருமண மண்டபம், உணவு உள்ளிட்டவற்றுக்கு முன்னேற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது கொரோனா பரவல் காரணமாக சென்னை ஆவடி அருகே திருமலை நகரில் உள்ள ஸ்ரீ பாளையத்தம்மன் ஆலயத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இதில், இருவீட்டார் தரப்பிலும் சேர்த்து 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தவாறு சமூக இடைவெளியை பின்பற்றினர். திருமணத்தை ஒட்டி மணமக்களுக்கு மோரை ஊராட்சி மன்ற தலைவர் திவாகரன் சானிடர் கொடுத்து கை கழுவி மணமக்களை வாழ்த்தினார். இதில் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆவடி நகர செயலாளர் சங்கர், பவுல்ராஜ், பரமசிவம், வெங்கட்ராகவலு, சிவக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



